கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டிய துறையாக மருந்து வணிகம் உள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 117.12 புள்ளிகள் உயர்ந்து 33,368 புள்ளிகளாக உள்ளது.