சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா 3 நிமிடங்களில் ரூ.10,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்று சாதனை படைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும்  ’சிங்கிள்ஸ் டே’ என்னும் மெகா ஆன்லைன் தள்ளுபடி விற்பனை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு விற்பனை தொடங்கிய முதல் 3 நிமிடங்களில் 10,000 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனை ஆகியுள்ளது.