இன்ஃபோசிஸ் நிறுவன சி.இ.ஓவாக இருந்த விஷால் சிக்கா ஆகஸ்ட் மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக பிரவின் ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாலி எஸ்.பரேக் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.