இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட `ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. தரையிலிருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல ஆகாஷ் ஏவுகணை ஒடிசா, சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் சோதிக்கப்பட்டது.