சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் பயிற்சிக் கல்லூரி விடுதியில் திடீரென 50-க்கும் மேற்பட்ட  மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்ததை அடுத்து சக மாணவிகள் கூட்டமாகக் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட மாணவிகள் குணமாகிவிட்டார்கள். 15 மாணவிகள் மயக்க நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.