தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சார் பதிவாளராக பணியாற்றியவர் ராமநாதன். இவர் மீது 2010-ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் பெற்றதற்காக லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.