கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை உடைந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ‘ஹெல்மெட் போடாவிட்டால் வழக்குப்போடும் இந்த அரசு, அணை உடைந்தால் வழக்குப்போடாதா. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்றார்.