சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்குத் தங்கத்தாலான நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மீது சாத்தவென்று, இன்று தங்கத்தால் ஆன நாகாபரணம் காஞ்சி மகான்கள் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதிகள், விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் அவர்கள் பூஜித்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.