காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். பிரதமர் மோடியைக் கீழ்த்தரமான மனிதர் என்று விமர்சனம் செய்தது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் காங்கிரஸ் விலக்கியுள்ளது.