ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களைத் தேடும் பணியைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.