தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - கழுகுமலைக்கு இடையில் உள்ள குமாரபுரத்தில் ஆற்றில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த மழையால் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் அந்தப் பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டது. இதில், சிமென்ட் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி சிக்கிக்கொண்டது.