திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள எஸ்.யூ.வனம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற டாடா சுமோ வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த 5 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.