தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு குளறுபடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தவறுகளிலிருந்து அரசு திருந்தியதாகத் தெரியவில்லை. நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த மஞ்சை மோகன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவர் பெயரில் இவருக்குப் பதிலாக, இவரின் மகள் பெயர் இடம் பெற்றுள்ளது.