கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையால் நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். பண மதிப்பிழப்பின்போது ஏராளமான கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது. அதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.