கரூர், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பள்ளப்பட்டி பேரூராட்சி. 50,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தப் பேரூராட்சி, தமிழ்நாட்டில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்று. இங்கு ஆறு மாதத்துக்கு முன்னர் கட்டப்பட்ட சாக்கடை நீருக்கான கால்வாய் முறையாக அமைக்கப்படாததால், நீர் தேங்கி நிற்கிறதாம்.