இப்படத்தில் கீழே படர்ந்திருக்கும் பிரகாசமான நீல நிறப் படலம் பூமி. கறுப்பு நிற திரை விண்வெளி. குட்டி பொம்மை போன்று மிதந்து கொண்டிருப்பவர்  Bruce McCandless.  இக்காட்சி 1984ம் ஆண்டு பதிவானது. எந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக விண்வெளியில் வலம் வந்த முதல் வீரர் புரூஸ். இவர் தனது 80 வயதில் கடந்த 21ம் தேதி காலமானார்.