சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. வரும் 14-ம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நிகழ்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.