ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கம்போல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.