பழனி முருகன் கோயில் ரோப்கார் மாதாந்தர பராமரிப்புப் பணி காரணமாக வரும் 3-ம் தேதி புதன்கிழமை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச் சேவையைப் பயன்படுத்தி மலைமீது சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.