காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு புதிய உற்சவர் சிலை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிலை கடத்தல்பிரிவு அதிகாரிகள் கோயிலில் சோதனை நடத்தினர்.