கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் இரவு நடை அடைக்கும் முன்பு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் உள்பிராகாரத்தைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதற்குப் பயன்படுத்தும் பல்லக்கு பழமையடைந்ததைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த விகாஸ் பட்டேல் என்ற பக்தர் 50 கிலோ எடையில் புதிய வெள்ளிப்பல்லக்கு வழங்கியுள்ளார்.