நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சென்னையிலிருந்து மலேசியா செல்கிறார். அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழ் திரை நட்சத்திரங்களுடன் ரஜினி இன்று இரவு மலேசியா செல்கிறார்.