தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 5, 6-ம் தேதிகளில் பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினி - கமல் இருவரும் கலந்துகொள்கின்றனர். தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிவரும் இருவரின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதன்முறையாகச் சந்திப்பதால் இது முக்கியதுவம் வாய்ந்ததாக உள்ளது.