ஆஃப்கானிஸ்தான் நாட்டின் காபுலில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 10 பேர் பலியாயினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.