பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்தியது. இந்நிலையில் தற்போது பாதுகாப்பு உதவியையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.