விஷால் ட்விட்டர் பதிவில், `அறிவிக்கப்படாத போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்து போயிக்கிறது. மக்கள் நலன் மீது அக்கறைகொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்' என்றுள்ளார்.