குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நேற்றும்,இன்றும் வெகுவிமர்சையாக நடந்தன.பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இவ்விழாவில், பல்லக்காபாளையம் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.