ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் ’தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை தர அரசுக்கு மனம் உள்ளது ஆனால் நிதிதான் இல்லை’ என்று பேசினார்.