இலங்கை நாட்டு தமிழ் பக்தர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். இலங்கையில் இருந்து சபரிமலை சென்ற 40 ஐயப்ப பக்தர்கள் இன்று சிதம்பரம் வந்தனர். அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பிலும், நடராசர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பிலும் பாத பூஜை செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.