கடந்த  ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.