தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க அமளியில் ஈடுபட்டது. அப்போது அமைதி காக்கும்படி ஆளுநர் தமிழில் கூறினார். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்து சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்புச் செய்தனர்.