கேப்டவுன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 208 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, 42.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அஷ்வின் 37 ரன்களும், கோலி 28 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கவின் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.