மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி பேட்மிண்டன் போட்டிகளில் சர்வதேச அளவில் அசத்திவருகிறார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத அந்த மாணவி, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளிலும், வரும் 2019-ல் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜூனியர் ஒலிம்பிக் போட்டிகளிலுல் விளையாடத் தகுதிபெற்றுள்ளார்.