தாய்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வந்த பிரதமர் பிரயுத், செய்தியாளர்களை பார்த்ததும், அவரின் உதவியாளரிடம் சைகையில் ’அதை கொண்டுவாருங்கள்’ என்றார். பிரயூத்தின் ஆள் உயர அட்டையில் செய்த சிலையை கொண்டு வந்து வைத்தார் அவரின் உதவியாளர். எந்த கேள்வியாக இருந்தாலும் இதனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி வேகமாக நகர்ந்தார்.