அமெரிக்க நாளிதழான 'வாஷிங்டன் டைம்ஸ்',  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஜிவானி பகுதியில் ராணுவத்தளம் அமைக்க சீன அரசு திட்டமிடுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை சீன அரசு நிராகரித்துள்ளது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை என்று சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லீ காங் விளக்கம் அளித்துள்ளார்.