ஹோண்டுராஸ் தீவு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மத்திய அமெரிக்கா வரை உணரப்பட்டது. பசிபிக் சுனாமி மையம் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுத்து, பின்னர், எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.