ஆஷஸ் தொடர் தோல்வியிலிருந்து வெளிவர ஐ.பி.எல் தொடரிலிருந்து ஜோரூட் விலகியிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடருக்குப் பின்னர், 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி அதிக போட்டிகளில் பங்கேற்க இருப்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.