ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் நிலவி வரும் பனிப்பொழிவு ரசிக்க வைக்கும் நிகழ்வாக உள்ளது. 1979-ம் ஆண்டு கடைசியாக அங்கு பனிமழை பொழிந்தது. அதன் பிறகு, கடந்த 2016-ல் மிதமான பனிப்பொழிவு நிகழ்ந்தது. கடந்த ஒரு வாரமாகப் பனிப்பொழிவு அதிகரித்து, பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலம் படர்ந்திருக்கிறது.