இந்தியாவின் 3 வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, 1966-ம் ஆண்டு ஜனவரி 10-ல் பாகிஸ்தான் உடனான போர் ஒப்பந்தத்தில் சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்டில் கையெழுத்திட்டுவிட்டு, அன்று இரவு 1.30 மணியளவில் சோவியத்திலேயே மறைந்தார். இவர் மட்டுமே பதவியிலிருக்கும்போது வெளிநாட்டில் மறைந்த இந்திய பிரதமர் ஆவார். இன்று அவரின் 52 வது நினைவு தினம்.