தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. 2 வது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை செஞ்சுரியனில் நடைபெறவுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் தவானுக்குப் பதில் ராகுல் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே போன்று ரஹானே அணியில் சேர்க்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.