ஒடிசாவின்  கும்சகி  மலைக்கிராமத்தில் இருந்து டவுனுக்கு செல்ல சாலை வசதி கிடையாது. பள்ளி செல்ல வேண்டுமென்றால் மலையை கடந்துதான் போக வேண்டும். இதனால்  ஜலந்தர் என்னும் கூலித் தொழிலாளி, தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனி ஆளாக களத்தில் இறங்கி மலையை குடைந்து சாலை அமைத்துள்ளார்.