ஆர்யா, சம்பத், நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் கஜினிகாந்த். சாய்ஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்குகிறார். ரஜினி ரசிகராகவும் மறதி வியாதி உள்ளவராகவும் ஆர்யா நடிக்கிறார். காமெடி கலாட்டாவாக உருவாகும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.