கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதி சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையை அரசு நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். அரசு கண்டுகொள்ளாத நிலையில், இளைஞர்கள் களத்தில் இறங்கி சாலையைச் சீரமைத்தனர்.