நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயை பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். புளியில் வேகவைத்தால் காய்கறிகளின் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.