இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளை சுமந்துசெல்லும் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  விண்ணில் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்வி சி-40 மூலம்  1,323 கிலோ எடை கொண்ட 31 செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. இதில் 3 இந்திய செயற்கைகோள்களும், 28 வெளிநாட்டு செயற்கைகோள்களும் உள்ளது.