ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், உடன் இருந்தவர்கள்  நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து வருகிறார்.