இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி சி40 விண்ணில் ஏவப்பட்டது. இதில் `இஸ்ரோ’வால் அனுப்பப்படும் இந்தியாவின் 100 வது செயற்கைக்கோளான கார்டோசாட் 2 விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பும் திறனுடையது இந்த செயற்கைக்கோள்.