தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தற்போது திருநாவுக்கரசர் இருக்கிறார். இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்'இளங்கோவன், ‘திருநாவுக்கரசர் தலைவர் பதவியிலிருந்து விரைவில் நீக்கப்படுவார். பொங்கலுக்குப் பிறகு, புதிய தலைவர் நியமிக்கப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.