சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டன. எனினும்  இன்னும் சிக்கல் தொடர்கிறது. குஜராத்தில் இந்தப் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.