தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர் சமாதியிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.